மனிதர்களுக்கு பரவக்கூடிய மின்க்ஸில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸின் புதிய பிறழ்ந்த பதிப்பைப் பற்றி இன்னும் அதிகமாக அறிய உலக சுகாதார நிறுவனம் (WHO) டேனிஷ் அலுவலர்களுடன் தொடர்பில் உள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
டேனிஷ் பிரதமர் ஃபெர்டெரிக்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''வடக்கு ஜுட்லேண்ட் பிராந்தியத்தில் உள்ள மிங்க் பண்ணைகளில் கொரோனா வைரஸின் பிறழ்ந்த திரிபு கண்டறியப்பட்டது. இதுபோன்ற பிறழ்ந்த வைரஸ்கள், பொதுமக்கள் பலரிடமும் கண்டறியப்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கரோனா தடுப்பூசிகளின் செயல்திறனில் சமரசம் செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 17 மில்லியன் மிங்க்-கள் கொல்லப்பட உள்ளன.