தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'வந்தது அடுத்த அலை’: கரோனா குறித்து எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது கவலை அளிப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

WHO
WHO

By

Published : Mar 23, 2021, 12:21 PM IST

Updated : Mar 23, 2021, 12:27 PM IST

கரோனா பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவி பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "உலகம் முழுவதும் கரோனா உயிரிழப்பு எண்ணிக்கை ஆறு வாரங்களுக்குப் பிறகு மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இது கவலைக்குரிய அம்சமாகும்.

உலகின் ஆறு பகுதிகளில் நான்கு பகுதிகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த வாரத்தை ஒப்பிடும்போது உலக அளவில் எட்டு விழுக்காடு உயர்ந்துள்ளது. ஐரோப்பாவில் மட்டும் 12 விழுக்காடும், தெற்காசியாவில் 49 விழுக்காடும், மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 29 விழுக்காடும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதேவேளை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது.

இந்த பாதிப்பு எண்ணிக்கை உயர உயர உயிரிழப்புகளும் அதிகரிக்கும்" என கவலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அதிகரிக்கும் கோவிட்-19: பிரான்சில் மீண்டும் லாக்டவுன்?

Last Updated : Mar 23, 2021, 12:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details