தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

ஐரோப்பாவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தம்: உலக சுகாதார அமைப்பு குற்றச்சாட்டு - உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா இயக்குனர் ஹான்ஸ் குல்கே

ஐரோப்பாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் மிகக் குறைவாக உள்ளது என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா இயக்குனர் ஹான்ஸ் குல்கே தெரிவித்துள்ளார்.

Europe's vaccination
Europe's vaccination

By

Published : Apr 2, 2021, 5:34 PM IST

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கோவிட்-19 அலை தீவிரமாக பரவிவருகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் லாக்டவுன் அறிவிப்புகள் வெளியாகிவருகின்றன. இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பா இயக்குனர் ஹான்ஸ் குல்கே ஐரோப்பாவில் உள்ள கோவிட்-19 நிலவரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கோவிட்-19 அலையை தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே என்றார். ஆனால் ஐரோப்பாவில் தடுப்பூசி செலுத்தும் வேகம் மிகக் குறைவாக உள்ளது. இதுவரை 10 விழுக்காடு ஐரோப்பிய மக்களுக்கு மட்டுமே முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது. நான்கு விழுக்காடு மக்களுக்கு மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனவே, ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணிகளை முடுக்கிவிட்டு உயிர்களை காக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 16 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்பு ஒரே வாரத்தில் ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இதுவரை 9.28 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கோவிட்-19 காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இதையும் படிங்க:பிரான்சில் அதிகரிக்கும் கோவிட் 2ஆம் அலை: கட்டுப்பாடுகள் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details