உலகிலுள்ள 190க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா வைரஸ் நோயின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த உலக சுகதார அமைப்பு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற விமர்சனமும் உலக நாடுகளிடையே அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் திங்கள்கிழமை காணொலி வழியே செய்தியாளர்களிடம் பேசிய உலக சுகாதரா அமைப்பின் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மரியா வான் கெர்கோவ், "கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் குறித்த தகவல்களை பல்வேறு நாடுகள் விரிவாக சேகரித்துவருகின்றன.
அறிகுறி அற்ற(Asymptomatic) நோயாளிகளையும் அவர்களது தொடர்புகளையும் கண்காணித்தனர். அதில் அறிகுறி அற்றவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவுவது என்பது மிக மிக அரிதாகவே இருந்துள்ளது" என்று தெரிவித்திருந்தார்.
உலக சுகாதரா அமைப்பின் இந்த கருத்துக்கு உலகளவிலுள்ள பல்வேறு ஆராய்ச்சியாளர்களும் தங்கள் அதிருப்திகளை வெளிப்படுத்திவருகின்றனர். அறிகுறி அற்றவர்கள் மூலம் கோவிட்-19 பரவாது என்பதற்கு இதுவரை எவ்வித அறிவியல் பூர்வமான ஆதாரமும் இல்லை என்று ஃபிரான்ஸ் நாட்டின் பிட்டி-சல்பெட்ரியர் மருத்துவமனை கல்லூரி பேராசிரியர் கில்பர்ட் டெரே தெரிவித்துள்ளார்.