கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 34 ஆயிரம் பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை கரோனாவால் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சுகாதார அமைப்புடன் இந்தியா கைகோர்த்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெட்ரோஸ் அதனோம் (Tedros Adhanom) தனது ட்விட்டர் பக்கத்தில், ''கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உலக சுகாதார அமைப்பின் போலியோ கண்காணிப்புக் குழுவுடன் இந்திய சுகாதார அமைச்சகம் கைகோர்த்துள்ளது. இதனால் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பை வேகமாக குறைக்க முடியும்.