வரலாறு காணாத பேரிடராக கரோனா வைரஸ் பரவல் உலகையே உலுக்கிவருகிறது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் மட்டும் மையம் கொண்டிருந்த கரோனா, மார்ச் மாத காலத்தில் உலகப் பெருந்தொற்றாக உருவெடுத்தது.
எதிர்பாராத பேரிடரான கரோனாவைச் சமாளிக்க முடியாமல் உலக நாடுகள் முற்றிலும் பரிதவித்துவருகின்றன. உலகளவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 லட்சத்தை நெருங்கும் நிலையில், கரோனா உயிரிழப்பு 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சீனாவைச் சேர்ந்த வூஹான் பகுதி வைரசின் பிறப்பிடமாகக் கருதப்படும் நிலையில், சீனா உலக நாடுகளிடம் உண்மையை மறைத்ததாகவும், அதற்கு உலக சுகாதார அமைப்பு துணை போனதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.