தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 21, 2021, 4:58 PM IST

ETV Bharat / international

பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வைத்து திருமண ஆடை!

பிரிட்டனைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வைத்து திருமண ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார்.

உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வைத்து திருமண ஆடை
உபயோகப்படுத்தப்பட்ட முகக்கவசங்களை வைத்து திருமண ஆடை

தற்போதுள்ள கரோனா சூழலில் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினியைப் பயன்படுத்துவது மிகவும் இன்றியமையாததாக உள்ளது. பொதுமக்கள் தற்போது முகக்கவசம் இல்லாமல் எங்கும் செல்வதில்லை. பெரும்பாலும் முகக்கவசம் அணிவது அதிகமாகியுள்ள சூழ்நிலையில் நாம் பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் முகக்கவசங்கள் அதிகளவில் உள்ளன.

இந்தச் சூழலில் பிரிட்டனைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர், நாம் அன்றாடம் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் முகக்கவசங்களை வைத்து திருமண ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளார் டாம் சில்வர்வுட் என்னும் ஆடை வடிவமைப்பாளர்.

இதற்காக சுமார் 1,500 முகக்கவசங்களைப் பயன்படுத்தியுள்ளார். உடல் அமைப்பு சரியான தோற்றத்தில் இருக்க இடுப்பில் மறுசுழற்சி செய்யக்கூடிய பிபிஇ கிட்டை பயன்படுத்தியிருக்கிறார்.

இந்த ஆடையை வடிவமைக்க திருமண ஏற்பாடுகளைச் செய்துதரும் ஹிச்ட் என்னும் இணையதளம் பொருளாதார உதவிகளைச் செய்துகொடுத்துள்ளது. இந்த ஆண்டு மட்டும் சுமார் 10 கோடி முகக்கவசங்கள் அணியப்பட்டுள்ளதாக ஹிச்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஐரோப்பிய நாடுகளை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு: 160 நபர்கள் பலி

ABOUT THE AUTHOR

...view details