இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ்:
60 வயதான முதியவர்கள், கரோனா தொற்று உறுதியானவர்கள், சமூக இடைவெளி பின்பற்ற முடியாத சூழ்நிலைகளில், மருத்துவர்கள் பயன்படுத்துக் கூடிய முகக் கவசங்களை வாங்கி அணிவது நல்லது.
மேலும் தொற்று பரவல் அதிகமாகி வருவதால், நோற்த்தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.
உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் செய்தியாளர் சந்திப்பு முகக் கவசம் அணிவதுடன் தினமும் குறிப்பிட்ட இடைவெளியில் கை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற செயல்களே கரோனா தொற்றிடம் இருந்து உண்மையில் நம்மை பாதுகாக்கும் என உலக சுகாதார மையத்தின் தலைவர் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அமெரிக்கா - தலிபான் தாக்குதலில் ஆப்கான் காவலர்கள் 10 பேர் உயிரிழப்பு