கரோனா பாதிப்பு ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மற்ற நாடுகளைக் காட்டிலும் பிரிட்டனில் அதன் தீவிரம் வெகுவாக உள்ளது. குறிப்பாக அந்நாட்டு அதிபர் போரிஸ் ஜான்சனே கரோனாவால் பாதிக்கப்பட்டார். ஒருகட்டத்தில் அவர் உடல் நிலை மோசடையவே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உடல்நிலைத் தேறி வந்துள்ளார்.
இந்நிலையில், நோய் தொற்றிலிருந்து முழுமையக மீண்டுவந்துள்ள போரிஸ் ஜான்சன், பிரிட்டன் கரோனா பாதிப்பு நிலவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரிட்டனில் கரோனா பாதிப்பு காரணமாக மார்ச் 23ஆம் தேதியிலிருந்து வர்த்தக நடவடிக்கை தேக்கமடைந்துள்ளது எனவும், மே மாதம் 7ஆம் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் தெரிவித்தார்.