இத்தாலி நாடு தனது 74ஆவது குடியரசு தினத்தை ஜூன் 2ஆம் தேதி கொண்டாடவுள்ளது. சுமார் ஒரு வாரம் கொண்டாடப்படும் குடியரசு தினத்தை முன்னிட்டு, வான்வழி போக்குவரத்துத் துறையினரின் அணிவகுப்பு நடைபெறும். கரோனாவால் வழக்கமாக நடைபெறும் வீரர்கள் அணிவகுப்புக்கு நடத்தாமல் வானில் வட்டமடிக்கும் விமானப்படையின் அணிவகுப்பு மட்டும் நடைபெற அனுமதியளித்துள்ளனர்.
இத்தாலியின் 74ஆவது குடியரசு தினம்... வானில் வட்டமடித்த விமானங்கள்! - Frecce Tricolori
ரோம்: இத்தாலியின் சிறப்பு அக்ரோபாட்டிக் விமானப்படை பிரிவினர், 74ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு வானில் வட்டமடித்து இத்தாலி கொடியின் வண்ணத்தை ஜொலிக்க செய்தனர்.
அதன்படி, 'ஃப்ரீசே ட்ரைகோலோரி (Frecce Tricolori) என்னும் நிகழ்ச்சியை இத்தாலியின் சிறப்பு அக்ரோபாட்டிக் விமானப்படையினர் (Italy's special acrobatic air force) வானில் நடத்திக்காட்டினர். குறிப்பாக இத்தாலி கொடியின் வண்ணங்கள் வானில் ஜொலித்ததை மக்கள் ஆர்வமாகப் பார்த்து ரசித்தனர். கரோனாவால் அதீத பாதிப்புக்குளான இத்தாலி நாடு, கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வருகின்றது. ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சீனாவை பாராட்டும் உலக சுகாதார அமைப்பு