உலகம் முழுவதும் ருத்ரதாண்டவம் ஆடிவரும் கரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் உலகளவில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், ஒரு லட்சத்து 37 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தும் உள்ளனர்.
இத்தாலியில் நாய், பூனைகளுக்கு வாக்கிங்! - Italy's Civil Protection Agency
ரோம்: கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனைகளை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் ஒன்றிணைந்து நடைபயணம் அழைந்து செல்கின்றனர்.
![இத்தாலியில் நாய், பூனைகளுக்கு வாக்கிங்! dog](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6826659-928-6826659-1587111873531.jpg)
இத்தாலியில் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருவத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்றுவருபவர்கள், வைரஸ் அறிகுறி காரணமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பவர்களின் வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனைகளுக்கு மனச்சோர்வு ஏற்படாமல் இருக்கும் வகையில், அவற்றை நடைபயணம் அழைத்துச் செல்ல பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த ஆர்வலர்கள் முன்வந்துள்ளனர். அவர்கள், இத்தாலி பொது பாதுகாப்பு அமைப்பின் மூலம் விலங்குகளுக்கு தேவையான மருத்துவ பொருள்கள், உணவுகள் ஆகியவற்றை வழங்கிவருகின்றனர்.
இதையும் பார்க்க: இரண்டாம் உலகப்போரின் 75ஆவது ஆண்டு வெற்றி தின அணிவகுப்பு: ரஷ்யா ஒத்திவைப்பு!