உலகளவில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 96 லட்சத்தை கடந்துள்ளது. தினந்தோறும் லட்சக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பல நாடுகளில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தியுள்ளதால் கரோனா தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக, ஐரோப்பிய நாடாளுமன்றக் குழுவுடன் வீடியோ கான்ஃபிரன்ஸில் உரையாடிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், கரோனா தொற்று இன்னும் பரவி கொண்டுதான் இருக்கிறது. பலர் கரோனா வைரஸால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.