தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

மருந்தை செலுத்த ஊசி தேவையில்லை.. வலியில்லை... புதிய கருவி... - ஊசியில்லாமல் மருத்து செலுத்தும் கருவி

நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் லேசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊசி இல்லாமல் மருந்துகளை உடலில் செலுத்தும் கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

Virtually painless needle
Virtually painless needle

By

Published : Oct 14, 2021, 7:27 PM IST

ஊசிகள் என்றாலே பலருக்கு பயம். அந்த வேளையில், பலர் பல்லை கடிப்பார், சத்தம் போடுவர், அழுது புலம்புவார். இப்படிபட்டவர்களை புன்னைகைக்க வைக்கும்படி ஒரு கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆம், நெதர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் லேசர் தொழில்நுட்ப உதவியுடன் ஊசி இல்லாமல் மருந்துகளை உடலில் செலுத்தும் கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு, "பெப்பல்ஸ் துப்பாக்கி" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, ட்வென்டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பெப்பல்ஸ் துப்பாக்கியின் காரணகர்த்தாவுமான டேவிட் பெர்னாண்டஸ் ரிவாஸ் கூறுகையில், "இந்த கருவியின் செயல்முறை ஒரு கொசு கடித்ததை விட விரைவாக நடக்கக்கூடியது.

அதோடு துளியும் வலியற்றது. அறிவியல்பூர்வமாகச் சொன்னால், மருந்து செலுத்தப்படும்போது தோளின் நரம்பு முனைகளை தொடாமல் உள்ளே செல்ல இந்த கருவி உதவுகிறது. அத்துடன் ஒரு மில்லி விநாடிக்குள் மருத்து திரவத்தை 100 கி.மீ. வேகத்தில் செலுத்துகிறது. குறிப்பாக மருத்துவ கழிவுகளை குறைக்கும், பாதுகாப்பனதாகவும் இருக்கும்" என்றார்.

இதையும் படிங்க:மருத்துவ ஊசிகள் ஏற்றுமதிக்கு மூன்று மாதம் தடை

ABOUT THE AUTHOR

...view details