தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரிட்டன் பொதுத்தேர்தலும் அந்நாட்டின் எதிர்காலமும்

பிரிட்டன் பொதுத்தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றி பிரெக்ஸிட்டை உறுதிசெய்துள்ள நிலையில், இந்தத் தேர்தலால் பிரிட்டன் அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன, இதனால் பிரிட்டன் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படும் உள்ளிட்டவை குறித்து விரேந்தர் கப்பூர் ஈடிவி பாரத்துக்கு எழுதிய கட்டுரை இதோ...

britan pm boris johnson, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
britan pm boris johnson

By

Published : Dec 18, 2019, 10:53 PM IST

ஒருவழியாக ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேற உள்ளது. மூச்சுக்கு முன்னூறு முறை 'பிரெக்ஸிட்டை (பிரிட்டன் வெளியேற்றத்தை) முடித்துவைப்போம்' என கூப்பாடிட்டு வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் ஆமோகமாக வெற்றிபெற்றதன் மூலம் பிரெக்ஸிட் உறுதியாகியுள்ளது.

பிரதமர் தெரசா மேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற போரிஸ், தன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை அருதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெறச் செய்து அசுர பலத்துடன் ஆட்சியமைத்துள்ளார். 1987ஆம் ஆண்டு மார்க்கரெட் தாட்சர் நிகழ்த்திய சாதனையை போரிஸ் தற்போது நிகழ்ச்சியுள்ளார்.

2016 பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பைத் தொடர்ந்து பிரிட்டனில் நிலவிவந்த பிரெக்ஸிட் இழுபறியால் சலிப்புதட்டிய மக்கள், ஜனவரி இறுதியோடு பிரெக்ஸிட்டை முடித்துவைப்பார் என்ற நம்பிக்கையில் போரிஸ் ஜான்சனுக்கு இந்த பரிசனை வழங்கியுள்ளனர்.

650 இருக்கைகள் கொண்ட பிரிட்டன் மக்களவையில் (House of Commons) கன்சர்வேட்டிவ் கட்சி வசம் 365 இருக்கைகள் உள்ளது.

இதையும் படிங்க : பிரெக்ஸிட் என்றால் என்ன? #brexit

எதிர்க்கட்சிக்கு படுதோல்வி

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி (Labours Party) இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. அதனிடமிருந்த 59 தொகுதிகளை கூடுதலாக பறிகொடுத்து வெறும் 203 தொகுதிகளை மட்டமே தக்கவைக்க முடிந்தது.

இடதுசாரி கொள்கைகளை மிளிரவிட்டு அடிமட்ட தொண்டர்களை தன் பைக்குள் போட்டுக்கொண்டு, கட்சித் தலைமையை சித்தாந்த ரீதியாத பிரித்தாண்டதன் மூலம் 50 ஆண்டுகளில் தொழிலாளர் கட்சி கண்டிராத பிரபலமற்ற தலைவர் ஜெரிமி கார்பினாகத்தான் இருக்க வேண்டும்.

இந்த 21ஆம் நூற்றாண்டில், சந்தைப் பொருளாதாரம், யூதர்கள், அமெரிக்கா ஆகியுவற்றை எதிர்ப்பது, ரஷ்யாவுக்கு ஆதரவளிப்பது, பிரிட்டனில் உள்ள தனியார் நிறுவனங்களை தேசிய மயமாக்குவது உள்ளிட்ட ஜெரிமி கார்பினின் நிலைபாடுகள் யாரையும் கவரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஜெரிமி கார்பினின் தெளிவற்ற பிரெக்ஸிட் நிலைபாட்டால், தொழிலாளர் கட்சியின் எஃக்குக் கோட்டைகளாக கருத்தப்பட்ட பல தொகுதிகளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு தாரைவார்க்கப்பட்டன.

தொழிலாளர் கட்சியிலும் தீவிர பிரெக்ஸிட் ஆதரவாளர்கள் இருப்பதை கருத்தில் கொள்ளாமல், தன்னைப் பிரதமராக்கினால் மீண்டும் பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பை நடத்துவேன் என சூளுரைத்தார் ஜெரிமி கார்பின். பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பிய ஒன்றிய ஏழை உறுப்பு நாடுகளிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் குறைந்த கூலிக்காக பிரிட்டனுக்கு படையெத்தது ஆகிவற்றால் அதிருப்தியில் இருந்த பிரிட்டனின் உழைக்கும் வர்கம் இந்தமுறை கன்சர்வேட்டிவ் கட்சிக்கே வாக்களித்தது. தொழிலாளர் கட்சியின் பிற்போக்குத்தனமான கொள்கைகளால், ரிமைன் ( ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவான) தொகுதிகளும் கன்சர்வேட்டிவ் பக்கம் தாவியுள்ளனர். எப்படி பார்த்தாலூம் போரிஸ் ஜான்சனுக்கே அனைத்தும் சாதகமாக அமைந்துவிட்டது.

தேர்தல் தோல்வி குறித்து தொழிலாளர் கட்சி ஆழயோசிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜெரிமி கார்பின், அதுவரை தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.

இவர் நிலமை இப்படி இருக்க, லிபரெல் டெமாக்ரெட்ஸ் கட்சித் தலைவர் ஜோ ஸ்வின்சனோ தான் போட்டியிட்ட தொகுதியையே பறிகெடுத்துவிட்டு, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதையும் படிங்க : பிரெக்ஸிட்டை இனி யாராலும் தடுக்க முடியாது - பிரிட்டன் பிரதமர் சூளுரை

தனி நாடாகும் ஸ்காட்லாந்து ?
நாட்டின் மற்ற பகுதிகளில் போரிஸ் காற்று வீச, ஸ்காட்லாந்தில் 48 தொகுதிகளைக் கைப்பற்றி (கடந்த தேர்தலை விட 13 தொகுதிகள் அதிகம்) அபார வெற்றி கண்டுள்ளது ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சி.

இதனால் ஸ்காட்லாந்தை தனிநாடாக்குவது குறித்து மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், பிரெக்ஸிட் வாக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்ற கூக்கூரல்களும் அதிகரித்துள்ளன. ஸ்காட்லாந்து தேசியவாதக் கட்சியை வழிநடத்தும் நிகோலஸ் ஸ்டர்ஜியன், பிரெக்ஸிட் குறித்து இரண்டாவது முறையாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தன் வாக்காளர்களுக்கு உறுதியுளித்துள்ளார். 2016ஆம் பிரெக்ஸிட் வாக்கெடுப்பில் ஸ்காட்லாந்து முழுவதும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்தில் சுதந்திரக் காற்று வீசுவதை தெளிவாக உணர்ந்துகொண்ட போரிஸ் ஜான்சன், ஒன்றிணைந்த பிரிட்டனுக்காகவே தன்னை மக்கள் பிரதமராக்கி உள்ளனர் என அழுத்தமாக தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் எதிர்காலம் போரிஸ் கையில்

2020 ஜனவரி 31ஆம் தேதி பிரெக்ஸிட் அரங்கேறிய பிறகு, பிரிட்டன் பல்வேறு தடைகளை சந்திக்க உள்ளது. பிரிட்டன் மீது கடும்கோபத்தில் உள்ள ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டுடன் நியாயமான ஒரு வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எப்படி இருந்தாலும் சரி, போரிஸ் ஜான்சனின் வேகத்துக்கு அது நடக்கப்போவதில்லை என்பது உறுதி.

அமெரிக்கா, இந்தியா, உள்ளிட்ட நாடுகளுடன் பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தமிட்டுக்கொள்ளும் என உளறிவரும் போரிஸ் ஜான்சனின் முடிவுகள் எளிதில் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது கேள்விக்குறி.

கன்சர்வேட்டிவ் வெற்றியால் ஸ்டெர்லிங் பவுண்ட்டின் மதிப்பு ஏற்றம் கண்டுள்ளது. ஆனால், பிரெக்ஸிட் குளறுபடி பிரிட்டன் நிறுவனங்கள், மற்றும் பொருளாதாரம் மீது எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கக்கூடும்.

பலம் இழந்துவரும் பிரிட்டன், வலுவான வர்த்தக கூட்டாளிகளை வைத்துக்கொண்டாலொழிய பொருளாரத்தில் வளர்ச்சி காண முடியாது. மூன்று மாதங்களில் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி என்ன தெரியுமா- ஜிரோ.

எனவே, போரிஸ் ஜான்சன் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதை நிறுத்திவிட்டு ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளோடு ஆக்கப்பூர்வமான வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

இதையும் படிங்க : அமெரிக்க ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா

ABOUT THE AUTHOR

...view details