18 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்றிருக்கும் ஆப்கானிஸ்தான் நாட்டில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து தலிபான் பயங்கரவாத அமைப்பும் அமெரிக்க அரசும் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக அமைதி ஒப்பந்தமிட தலிபான் ஒப்புக்கொண்டது. அமெரிக்கவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்கவிருந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில், அமெரிக்க பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அதிரடியாக அறிவித்தார்.
இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் டேங்க்ஸ் கிவ்விங் பண்டிகையையொட்டி ஆப்கானிஸ்தானுக்குத் திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தலிபான்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும் என அறிவித்தார். அதன்படி கர்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்கா - தலிபான் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கிய நடந்துவருகிறது.