கரோனா பெருந்தொற்று தொடர்பாக உலக சுகாதார அமைப்பிற்கும், அமெரிக்க அதிபர்டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
சீனாவின் ஊதுகுழலாக உலக சுகாதார அமைப்பு செயல்படுகிறது என அதிபர் ட்ரம்ப் நேரடியான விமர்சனத்தை முன்வைத்தார். மேலும், சீனாவை காப்பாற்றும் விதமாக கரோனா பெருந்தொற்று விவகாரத்தில் ஒழுங்காகச் செயல்படவில்லை எனவும், அந்த அமைப்புக்கு அதிக நிதியளிக்கும் அமெரிக்கா இதன்மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டினார். அத்துடன் அந்த அமைப்பிலிருந்து அமெரிக்கா விலகுவதாகவும், இதுவரை வழங்கப்பட்ட நிதி முற்றாக நிறுத்திவைக்கப்படும் எனவும் அறிவித்தார்.