தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

இஸ்ரேல்-பாலஸ்தீன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் - ஐநா அழைப்பு

இஸ்ரேல்-பாலஸ்தீன் எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என ஐநா அறிவுறுத்தியுள்ளது.

By

Published : May 17, 2021, 4:39 PM IST

Israel-Palestine violence
Israel-Palestine violence

இஸ்ரேல்-பாலஸ்தீன் எல்லைப் பகுதியான காசாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பயங்கரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும், பாலஸ்தீனின் ஹமாஸ் இயக்கமும் மாறி மாறி நடத்தி வரும் தாக்குதலில் சிக்கி இதுவரை 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் பேசிய ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்ரெஸ், இரு தரப்பும் தாக்குதலை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த மோதல் பாதுகாப்பு பிரச்னையை மட்டுமல்லாது, மனித உரிமை சிக்கலையும் உருவாக்கியுள்ளது. இதன் விளைவானது மேலும் வன்முறையில் கொண்டு சேர்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பும் அமர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, தங்கள் எல்லைகளை முறையாக வரையறை செய்வதுதான் இதற்கு ஒரே தீர்வு எனத் தெரிவித்த குட்ரெஸ், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஐநா எப்போதும் துணை நிற்கும் எனவும் உறுதியளித்துள்ளார்.

இதையும் படிங்க:ராக்கெட்களை வானிலேயே அழிக்கும் இஸ்ரேல் பாதுகாப்பு அரண்... அயன் டோம் சிஸ்டம் முழுத் தகவல்!

ABOUT THE AUTHOR

...view details