தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'இந்தியப் பயணி ரகளை'... அவசர அவசரமாக தரையிறங்கிய ஏர் பிரான்ஸ் விமானம்! - ஏர் பிரான்ஸ் விமானம்

சோபியா: பாரீஸிலிருந்து டெல்லிக்குச் சென்ற ஏர் பிரான்ஸ் விமானம், பயணியின் ரகளை காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Air France plane
ஏர் பிரான்ஸ் விமானம்

By

Published : Mar 7, 2021, 3:37 PM IST

பிரான்ஸ் நாட்டிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம், அவசர அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது.

முதல்கட்ட தகவலின்படி, விமானத்தில் பயணித்த நபர் ஒருவர், திடீரென சகப் பயணிகளுடன் மோசமான முறையில் நடந்துகொண்டது மட்டுமின்றி விமானப் பணியாளர்களையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர் பைலட் அமர்ந்திருந்த கதவைத் திறக்க முயன்றுள்ளார். நிலைமை கைமீறிப் போனதால், உடனடியாக பணியாளர்கள், விமானத்தைத் தரையிறக்கியுள்ளனர். தற்போது, ரகளையில் ஈடுபட்ட இந்தியப் பயணியிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் இந்தியா பயணம்?

ABOUT THE AUTHOR

...view details