தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

யு.பி.ஆர். மனித உரிமையைப் பாதுகாக்கும் கருவி - இந்தியா - UNHCR UPR instrument for rights protection india

ஜெனிவா: ஐநா மனித உரிமை ஆணையத்தின் உலகளாவிய கால மறுஆய்வு (Universal Periodic Review -UPR) பரிசீலனை முறை மனித உரிமையை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் உதவும் கருவியாகச் செயல்படுகிறது என்றும் அதில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

Vimarsh Aryan
Vimarsh Aryan

By

Published : Jun 16, 2020, 8:27 AM IST

இது குறித்து ஐநா மனித உரிமை ஆணையத்தின் 43ஆவது கூட்டத்தில் பேசிய இந்தியாவுக்கான நிரந்தரத் தூதரக முதன்மைச் செயலர் விமார்ஷ் ஆர்யன், "உலகளாவிய கால மறுஆய்வு பரிசீலனை முறை அடிப்படைச் சுதந்திரம், மனித உரிமையை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் உதவும் கருவியாகச் செயல்படுகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

சமூக, அரசியல், பொருளாதார சூழல்களைக் கருத்தில்கொண்டு வெளிப்படையான, ஆக்கப்பூர்வமான, அரசியல் சாயம் அல்லாத, எந்தத் தேர்ந்தெடுப்புகளுமின்றி நடத்தப்படும் மனித உரிமை விசாரணைக்கு உலகளாவிய கால மறுஆய்வு வழிவகுக்கிறது.

அப்படி இருக்கையில், குறிப்பிட்ட சில மனித உரிமை மீறல்களில் மட்டும் உறுப்பு நாடுகள் கவனம் செலுத்துமாறு கூறுவது தவறானது.

உலகளாவிய கால மறுஆய்வு பரிசீலனைக்கு ஒதுக்கப்படும் குறுகிய காலக்கெடுவால் உறுப்பு நாடுகள் ஆக்கப்பூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

ஆகையால் உலகளாவிய கால மறுஆய்வு பரிசீலனைக்குக் கூடுதல் நேரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க : 'உத்தரப் பிரதேச பணி தேர்வுக்குழு ஊழல் நிறைந்தது'- பிரியங்கா காந்தி

ABOUT THE AUTHOR

...view details