தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

'அசாஞ்சேவை விடுவிக்க வேண்டும்..!' - ஐநா வலியுறுத்தல்

ஜெனிவா: "பிணை நிபந்தனைகளை மீறிய குற்றத்திற்காக 50 வாரங்கள் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்சேவை விடுவிக்க வேண்டும்" என்று, ஐநா வலியுறுத்தியுள்ளது.

ஜுலியன் அசான்ஞ்சே

By

Published : May 4, 2019, 1:54 AM IST

அமெரிக்க உளவுத்துறை உலக நாடுகளை ரகசியமாக வேவுப் பார்த்ததை, 2010ஆம் ஆண்டு, பொதுதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமானவர் விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே.

அரசு ரகசியங்களை வெளியிட்டதால் கடுங்கோபம் அடைந்த அமெரிக்க அரசு, அவரை வலைவீசி தேடியது. இதனால், பிரிட்டன் தலைநகர் லண்டனில் தலைமறைவானார் ஜுலியன் அசாஞ்சே. பின்னர் அந்நாட்டின் காவல்துறையிடம் சரணடைந்து, அவர் பிணையில் விடுவிக்கப்படார்.

இதனிடையே, சுவீடனில் அசாஞ்சேக்கு எதிராக நடைபெற்று வந்த பாலியல் வழக்கு தொடர்பாக, அவரை நாடு கடத்த வேண்டும் என பிரிட்டனிடம் அந்நாடு கோரிக்கை விடுத்தது. இந்நிலையில், எங்கு தன்னை நாடு கடத்தி விடுவார்களோ என்ற பயத்தில் லண்டலில் உள்ள ஈகுவேடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் புகுந்தார். இதனால், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த பிணை நிபந்தனைகளை மீறினார்.

இதுதொடர்பாக லண்டலில் நடைபெற்று வந்த வழக்கில், பிணை நிபந்தனைகளை மீறியதால், அசாஞ்சேவுக்கு 50 வாரங்கள் சிறை தண்டனை விதித்து சவுத் வார்க் நீதிமன்றம் உத்தரவிட்டது. "ஜுலியன் அசாஞ்சே சிறையில் அடைக்கப்பட்டது மனித உரிமை மீறல். அவரை விரைவில் விடுவிக்க வேண்டும்" என்று ஐநா கருத்து தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details