இங்கிலாந்து நாட்டின் இளவரசர் வில்லியம் - கேத் தம்பதிக்கு ஜார்ஜ் (6), சார்லோட் (4), லூயிஸ் (2) என மூன்று குழந்தைகள் உள்ளன. சமீபத்தில் குட்டி இளவரசர் லூயிஸின் 2ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது அழகிய புகைப்படங்களை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், இளவரசர் வில்லியமின் இரண்டாவது மகள் சார்லோட்டுக்கு வரும் மே 2ஆம் தேதி பிறந்த நாள் வருகிறது. சார்லோட்டின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக இளவரசர் வில்லியம் ஸூம் செயலியில் பார்ட்டியை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
கரோனா காலத்தில் தகுந்த இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்தினால், ஸூம் செயலி வீடியோ அழைப்பு மூலம் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரின் முன்னிலையில் இளவரசி சார்லோட் கேக் வெட்டி, கேம்ஸ் விளையாடி, பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார்.