தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரிட்டன் வரலாற்றின் புதிய அத்தியாயம் - போரிஸ் ஜான்சன்! - போரிஸ் ஜான்சன்

லண்டன்: பிரெக்ஸிட் ஒப்பந்தத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்ட நிலையில், அந்நாட்டின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Borris
Borris

By

Published : Jan 25, 2020, 9:35 AM IST

ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக இருந்த பிரிட்டன், அதிலிருந்து வெளியேற முடிவு செய்தது. அதற்காக 2016ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பு நடந்தது. இதற்கு 51 விழுக்காடு மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவு தெரிவித்தனர்.

இருப்பினும் பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை லண்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் நீண்ட இழுபறி நிலவியது. இதனால் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தலைச் சந்தித்தார்.

2019ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற்ற தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்றது. போரிஸ் ஜான்சன் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றுக்கொண்டார். அதைத்தொடர்ந்து, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் அவர் பெரும் முனைப்பு காட்டினார்.

டிசம்பர் மாத இறுதியில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு பிரிட்டன் ராணி எலிசபெத் தற்போது ஒப்புதல் வழங்கிய நிலையில், போரிஸ் ஜான்சன் கையெழுத்திட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "2016ஆம் ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பின் முடிவாக கையெழுத்திட்டுள்ளேன். இது அருமையான தருணம். பல ஆண்டுகளாக நடைபெற்ற வாதம் முடிவுக்கு வந்துள்ளது. இந்த கையெழுத்தால் நாட்டின் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெளியேறிய வோடஃபோன்... அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்!

ABOUT THE AUTHOR

...view details