உக்ரைன் நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்காவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒலெனா தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது கணவருக்கும், குழந்தைகளுக்கும் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இல்லாதது உறுதியாகியுள்ளது. நான் நன்றாக இருப்பதாக உணர்கிறேன். எனது குடும்பத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்று விலகி இருந்து சிகிச்சை எடுத்துவருகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார்.