தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

உக்ரைன் போரில் உலகின் மிகப்பெரிய விமானம் சேதம் - உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்

உலகின் மிகப்பெரிய விமானமான Antonov-225 ரஷ்யாவின் போர் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக உக்ரைன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய விமானம் சேதம்
உலகின் மிகப்பெரிய விமானம் சேதம்

By

Published : Feb 28, 2022, 4:59 PM IST

உக்ரைன் நாட்டில் ரஷ்ய படையினர் தீவிர போர் தாக்குதல் நடத்திவருகின்றனர். ரஷ்யாவின் போர் தாக்குதலுக்கு எதிராக உக்ரைன் நாட்டின் போர் வீரர்களும் தொடர்ந்து கடுமையாக சண்டையிட்டுவருகின்றனர். இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் போர் சேதம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகின் மிகப்பெரிய விமானமான Antonov-225 ரஷ்யாவின் போர் தாக்குதலில் சேதமடைந்துள்ளது. இந்த விமானத்தின் நீளம் 290 அடி அதாவது சுமார் 84 மீட்டர் அளவாகும். உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் உள்ள விமான நிலையத்தில் இந்த விமான நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது இரு தரப்பினரும் போர் புரிந்தபோது இந்த விமானம் சேதமடைந்துள்ளது.

நிலைமை சீரடைந்தப்பின் சேதமடைந்த விமானத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என உக்ரைன் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:ரஷ்யாவுக்கு எதிரான வாக்கெடுப்பு: இந்தியா மீண்டும் புறக்கணிப்பு

ABOUT THE AUTHOR

...view details