தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

Zelensky in EU: 'எங்களை யாராலும் உடைக்க முடியாது; நாங்கள் உக்ரைனியர்கள்' - Ukraine Application to Join EU

எங்களை யாராலும் உடைக்க முடியாது, நாங்கள் உக்ரைனியர்கள்; வலிமையானவர்கள் என உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Zelensky in EU
Zelensky in EU

By

Published : Mar 1, 2022, 8:18 PM IST

Updated : Mar 1, 2022, 8:54 PM IST

ஸ்ட்ராஸ்பர்க் (பிரான்ஸ்): உக்ரைன் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை (பிப். 24) போரை தொடங்கியது. ஐந்து நாள்களை கடந்து போர் தொடர்ந்து வரும் நிலையில், ஆறாம் நாளான இன்று (மார்ச் 1) தலைநகர் கீவ்-இல் ரஷ்ய படைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன.

முன்னதாக, ரஷ்ய - உக்ரைன் ஆகிய இரு நாடுகள் நேற்று பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. அதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் விண்ணப்பம்

இதைத்தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) உக்ரைன் நாட்டை இணைத்துக்கொள்ளும்படி அந்நாட்டு அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி நேற்று விண்ணப்பித்திருந்தார்.

உக்ரைனின் விண்ணப்பம் குறித்து விவாதிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் இன்று கூடியது. இந்நிலையில், நாடாளுமன்ற விவாதத்தில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக பங்கேற்றார்.

நிலத்திற்கான போர்

அப்போது அவர் ஆற்றிய உரையில், "எங்களின் அனைத்து நகரங்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கி முடக்கப்பட்டாலும், எங்கள் நிலத்திற்காகவும், எங்கள் சுதந்திரத்திற்காகவும் நாங்கள் சண்டையிடுகிறோம். எங்களை யாராலும் உடைக்க முடியாது. நாங்கள் உக்ரைனியர்கள்; வலிமையானவர்கள்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி உரை

நீங்கள் (ஐரோப்பிய யூனியன்) எங்களுடன் இருப்பதை நிரூபியுங்கள். எங்களை தனித்து விடமாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள். பின்னர், வாழ்க்கை மரணத்தை வெல்லும். வெளிச்சம் இருளை வெல்லும்.

ஐரோப்பிய ஒன்றியம் எங்களுடன் நின்றால் நாங்கள் வலுபெறுவோம். நீங்கள் இல்லையென்றால், உக்ரைன் தன்னித்துவிடப்படும்" எனக் கூறினார்.

அவையில் நீண்ட கரகோஷம்

அவரின் உரையின் போதே ஐரோப்பிய ஒன்றிய சட்ட வல்லுநர்கள் பலரும் #standwithUkraine என அச்சிடப்பட்ட டி-சர்ட்டை அணிந்து உக்ரைன் கொடியை ஏந்தியப்படியும், மற்றவர்கள் நீலம் - மஞ்சள் நிறத்தில் (உக்ரனை கொடியின் நிறம்) ரிப்பன், சால்வைகள் அணிந்தும் அவையில் எழுந்து நின்று நீண்ட நேரம் கரகோஷம் எழுப்பினர்.

ஜெலன்ஸ்கி உரைக்கு அவை உறுப்பினர்கள் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்

ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடங்கிய பின்னர், உக்ரைன் நாட்டிற்கு ராணுவ ரீதியில் உதவ தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியர்கள் கீவ் நகரை விட்டு வெளியேறுங்கள் - தூதரகம் அறிவுரை

Last Updated : Mar 1, 2022, 8:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details