தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 18, 2020, 4:46 PM IST

ETV Bharat / international

10 கோடி தடுப்பூசிகள்: கரோனாவை கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் தீவிரம்

லண்டன்: பிரிட்டனில் கரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர தடுப்பூசி பரிசோதனையை அந்நாட்டு அரசு தீவிரப்படுத்திவருகிறது.

UK
UK

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியோ, மருந்தோ கண்டுபிடிக்காத நிலையில், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன.

பிரிட்டனைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இந்த முன்னெடுப்பில் படுவேகமாக செயலாற்றிவருகிறது. பல்வேறு பரிசோதனைக் கட்டங்களை தாண்டி இறுதி வடிவத்தை அடைவதற்கான முயற்சியில் தற்போது ஆக்ஸ்போர்டு ஆய்வகம் செயல்படுகிறது.

வரும் அக்டோருக்குள் தடுப்பூசி முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஆக்ஸ்போர்டு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தயாரிப்பு பணியில் தாமதிக்க வேண்டாம் என்ற முடிவில் 10 கோடி தடுப்பூசிகளை இலக்காக வைத்து அவற்றை மருந்தக நிறுவனங்கள் தயாரித்துவருகின்றன. செப்டம்பர் மாதத்துக்குள் 3 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படும் எனவும் பிரிட்டன் அரசு நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

இந்த மருத்துவ பரிசோதனை வெற்றிகரமாக செயல்படும் என்ற நம்பிக்கையில் இவை தயாரிக்கப்படும் நிலையில், தோல்வியடைந்தால் தயாரிக்கும் தடுப்பூசிகள் அனைத்தும் வீணாகி நஷ்டத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஆப்கன் அரசமைப்பில் அதிகாரப்பகிர்வு முறை அமல்

ABOUT THE AUTHOR

...view details