உலகில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா வைரஸ் பாதிப்பினைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் முயன்றுவரும் நிலையில், பிரிட்டன் ஒன்பது கோடி டோஸ்-க்கான கரோனா வைரஸ் தடுப்பூசி ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்காக பிரிட்டன், மருந்து நிறுவனங்களான பயோஎன்டெக், ஃபைசர், வால்னேவா-வுடன் இணைந்து தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் கூறுகின்றன.
உலகளவில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசி 10 கோடி ஒப்பந்தங்களுடன் முதலிடத்தில் உள்ளது. இருப்பினும், சோதனை அடிப்படையில், எந்த மருந்துகள் வேலை செய்யக்கூடும் என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. இந்நிலையில், லண்டனின் அரசு தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் கேட் பிங்காம் பேசுகையில், “எங்களிடம் நம்பிக்கைக்குரிய ஒப்பந்ததாரர்களும், பரிசோதகர்களும் உள்ளனர். மற்ற நாடுகளைக் காட்டிலும், கரோனா தடுப்புப் பணிகளில் நாங்கள் வேகமாக நகர்ந்துகொண்டுள்ளோம்” என்றார்.