பிரிட்டனை மிரட்டும் புது கரோனா
பிரிட்டன் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் அலை பாதிப்பு தீவிரமடைந்துவரும் நிலையில், பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் அதன் வேகம் பண்மடங்கு அதிகரித்தது. இதையடுத்து, அந்நாட்டின் பெருந்தொற்று வல்லுநர்கள் நடத்திய ஆய்வில், கோவிட்-19 வைரஸ் புதுவித பரிணாமம் பெற்று உருமாறியுள்ளது கண்டறியப்பட்டது.
இந்த உருமாறிய கரோனாவால் அந்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்நாட்டில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள் மிகுந்த கட்டுப்பாடுடனே நடைபெறவுள்ளது.