லண்டன்: உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார அலுவலர்கள், உலகளவில் 1.5 மில்லியனுக்கும் அதிகமானவர்களை பலிகொண்ட தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக பில்லியன் கணக்கான மக்களுக்கு விரைவாக தடுப்பூசி வழங்கும் பணிக்குத் தயாராகிவருகின்றனர்.
இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் சுமார் 1.74 மில்லியன் கரோனா பாதிப்புகளுக்கு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக லண்டனில் நாளுக்கு நாள் தொற்றின் தீவிரம் அதிகரித்துவருகிறது. இதனால் மக்கள் அனைவரும் தொடர்ந்து தேசிய சுகாதார அமைப்பைத் தொடர்புகொண்டு தடுப்பூசி தொடர்பான தகவல்களைக் கேட்டறிந்துவருகின்றனர்.
ஐரோப்பிய நாடுகள் நன்கு வளர்ந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், அவை குறிப்பாக முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதற்கு உதவுகிறது. இங்கு தயாரிக்கும் தடுப்பூசிகள் அனைத்து மக்களுக்கும் செலுத்த ஏதுவாகவும் இல்லை. எனவே, ஏழு வெவ்வேறு தயாரிப்பாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கான தடுப்பூசிகளைப் பெறவுள்ளது.