தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

லாக்டவுனுக்குப்பின் முதன்முறையாக தலைகாட்டிய எலிசபெத் மகாராணி - விண்ட்சர் கோட்டை எலிசபெத் ராணி

லண்டன்: கரோனா பெருந்தொற்று பரவல் காரணமாகப் பலத்த பாதுகாப்பிலிருந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத், ஊரடங்கிற்குப்பின் முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டார்.

Eliz
Eliz

By

Published : Jun 1, 2020, 4:57 PM IST

உலகநாடுகளையே அச்சுறுத்திவரும் கரோனா பெரும்தொற்று பீதி, அரச குடும்பங்களையும் விட்டுவைக்கவில்லை. பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த எலிசபெத் மகாராணி, தனது ஆஸ்தான வசிப்பிடமான பக்கிங்ஹாம் அரண்மனையை காலிசெய்துவிட்டு, விண்ட்சர் கோட்டைக்கு குடிபெயர்ந்தார்.

பிரிட்டனில் கரோனா தொற்று, அதிவேகமாகப் பரவி உயிரிழப்பு உச்சத்தைத் தொட்டதால், கடந்த இரண்டு மாதங்களாக அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கு அறிவிப்புக்குப்பின், தனது வசிப்பிடத்தைவிட்டு வெளியேவராத எலிசபெத் ராணி, நீண்ட காலத்திற்குப்பிறகு வெளியே தலைகாட்டியுள்ளார்.

குதிரை ஓட்டும் எலிசபெத் மகாராணி

குதிரையேற்றப் பிரியரான எலிசபெத், விண்ட்சர் கோட்டையில் உள்ள புல்வெளி மைதானத்தில் 14 வயதான போனி என்ற குதிரையை, சிறிதுநேரம் ஓட்டி மகிழ்ந்தார். பிரிட்டன் நாட்டில் இதுவரை 2 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கரோனா தாக்கத்தின் காரணமாக பலியாகியுள்ளனர்.

இதையும் படிங்க:உச்சமடையும் போராட்டம்... பதுங்கு குழிக்குள் ட்ரம்ப்

ABOUT THE AUTHOR

...view details