பிரெக்ஸிட் விவகாரத்தால் துவண்டுகிடக்கும் பிரிட்டனில் வரும் டிசம்பர் 12ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி கடந்த ஒரு மாத காலமாக கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர்கள் கட்சி (லெபர்ஸ் பாட்டி), லிபரல் டெமாக்ரேட்ஸ் கட்சி, பிரெக்ஸிட் கட்சி, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அனல் பறக்கப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, சவன்டா காம்ரெஸ் நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட புதிய கருத்துக் கணிப்பில், பிரமதர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 42 விழுக்காடு மக்கள் ஆதரவுள்ளதாகவும், ஜெரிமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கு 32 விழுக்காடு ஆதரவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதுபோன்று, லிபரல் டெமாக்ரேட்ஸ் கட்சிக்கு 12 விழுக்காடும், பிரெக்ஸிட் கட்சிக்கு 3 விழுக்காடும், க்ரீன் கட்சிக்கு 2 விழுக்காடும் ஆதரவு உள்ளதாக தெரியவந்துள்ளது.
முன்னதாக, யூகௌவ் நிறுவனம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் ஜெரிமி கார்பினின் பரப்புரை பெரிதாக மக்களைக் கவரவில்லை என்று கூறப்பட்டிருந்த நிலையில், சவான்டாவ காம்ரெஸின் கருத்துக் கணிப்பும் கன்சர்வேட்டிவ் கட்சியின் வெற்றி வாய்ப்பை உறுதிசெய்துள்ளது.
சவான்டா காம்ரெஸின் கருத்துக் கணிப்பில் வாக்குப் பதிவில் பிரதிபலிக்குமேயானால், கன்சர்வேட்டிவ் கட்சி 341 தொகுதிகளையும், தொழிலாளர் கட்சி 32 தொகுதிகளையும், லிபரல் டெமாக்ரேட்ஸ் கட்சி 14 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புகள் உள்ளதாக எலக்டோரல் கெல்குலஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரிட்டன் தலையெழுத்தை தீர்மானிக்கும் தேர்தல்!