தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பேச்சுவார்த்தை மூலம் எல்லைப் பிரச்னைக்கு தீர்வுகாண்க - பிரிட்டன் பிரதமர்

லண்டன்: இந்தியா-சீனா தங்களுக்கிடையேயான எல்லைப் பிரச்னையை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக்கொள்ளுமாறு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவுறுத்தியுள்ளார்.

UK PM BORIS JOHNSON
UK PM BORIS JOHNSON

By

Published : Jun 25, 2020, 12:00 PM IST

Updated : Jun 25, 2020, 2:07 PM IST

இது தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "இந்தியா-சீனா இடையே நிலவிவரும் எல்லைப் பிரச்னை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

இதனைப் பிரிட்டன் கூர்ந்து கவனித்துவருகிறது. என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்னையை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும்" என போரிஸ் ஜான்சன் பதிலளித்தார்.

லடாக் எல்லையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினருக்கு இடையே கடந்த ஒன்றரை மாதங்களாக மோதல் போக்கு நிலவிவருகிறது.

இந்தப் பிரச்னைக்குச் சுமுகத் தீர்வுகாண உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில், ஜூன் 15ஆம் தேதி சர்ச்சைக்குரிய கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன படையினர் பயங்கர கைகலப்பில் ஈடுபட்டனர்.

இதில், 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்ததை அடுத்து எல்லைப் பிரச்னை மோசமடைந்துள்ளது. இதையடுத்து, ராணுவ காமாண்டர்கள் இடையே இவ்வார தொடக்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் எல்லைப் பகுதிகளிலிருந்து படைகளை விலகிக் கொள்ள பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது.

ஆனால், இதற்கு நேர்மாறாக சீனப் படையினர் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்குக்கு மீண்டும் திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: இருநாட்டுப் படைகள் மோதிக்கொண்ட இடத்திற்கு வந்த ராணுவத் தளபதி!

Last Updated : Jun 25, 2020, 2:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details