தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 4, 2021, 8:53 PM IST

ETV Bharat / international

பிரிட்டனில் உருமாறிய கரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் தீவிரம்!

லண்டன்: பிரிட்டனில் உருமாறிய கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

போரிஸ்
போரிஸ்

பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த உருமாறிய கரோனாவைக் கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் முன்னணி மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகா இணைந்து தயாரித்த தடுப்பூசியை மக்களுக்கு போடும் பணி இன்று முதல் தொடங்கப்பட்ட நிலையில், லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு சென்று போரிஸ் ஜான்சன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "கரோனா கட்டுப்பாடுகளால் மக்கள் விரக்தியடைய வாய்ப்புள்ளது. ஆனால், கூடுதல் கட்டுப்பாடுகளை அவசியமாக அமல்படுத்த வேண்டும்.

கரோனா எண்ணிக்கையை கருத்தில் கொண்டால், கடும் நடவடிக்கையை எடுத்துதான் ஆக வேண்டும். அதற்கு மாற்று கருத்தே இல்லை. அதனை வரும் காலங்களில் அறிவிப்போம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்களின் கவலையை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பள்ளிகள் பாதுகாப்பாக உள்ளன" என்றார். கடந்த ஆறு நாள்களில், உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,000த்தை தாண்டியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details