மத்திய ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரியும் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுவருகிறது.
இந்நிலையில், இந்திய விவசாயிகளின் தொடர் போராட்டம் தொடர்பாக இங்கிலாந்தின் கவலைகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு தெரியப்படுத்துமாறு, அந்நாட்டின் எதிர்க்கட்சி எம்.பி.யும், சீக்கியருமான தன்மன்ஜீத் சிங் தேசி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோரிக்கைவிடுத்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பிரதமர் போரிஸ் ஜான்சன், விவசாயிகள் பிரச்சினையை இந்தியா-பாகிஸ்தான் இடையே தீர்க்க வேண்டிய பிரச்சினை என்று தவறாக பதில் அளித்தார்.