இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் இணையருக்கு கடந்த மாதம் மகன் பிறந்த நிலையில், விரைவில் கேரி சைமண்ட்ஸை போரிஸ் திருமணம் செய்யவுள்ளார் என ஊடங்கங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், போரிஸ் ஜான்சன் தற்போது தன் இரண்டாவது மனைவி மெரினா வீலரை விவாகரத்து செய்துள்ளார்.
முன்னதாக போரிஸ் ஜான்சன் - கேரி சைமண்ட்ஸ் இணையருக்குக் குழந்தைப் பிறக்கும் முன்னரே, கடந்த பிப்ரவரி மாதம் போரிஸ் ஜான்சனிடமிருந்து முழுமையான விவாகரத்துக் கோரி மெரீனா வீலர் விண்ணப்பித்திருந்தார்.
போரிஸ் ஜான்சன் தரப்பு, வீலர் தரப்பு என இரு தரப்பினருக்கும் தலா 4 மில்லியன் பவுண்டுகள் வீதம் சொத்துக்களைப் பகிர்ந்து விவாகரத்து பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.