தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரெக்ஸிட் ஒப்பந்தம்: அரசியல் ஆளுமையை நிரூபிப்பாரா தெரசா மே? - முறை

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்றாவது முறையாக இன்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பிரெக்ஸிட் ஒப்பந்தம் : மூன்றாவது முறை தோற்பாரா மே?

By

Published : Mar 29, 2019, 11:46 AM IST

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு தெரசா மே தலைமையிலான அரசு முடிவெடுத்து, 2016ஆம் ஆண்டு வாக்கெடுப்பு நடத்தியது. இதில் பெற்ற வெற்றியால் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டது.

ஆனால் ஒப்பந்தத்தின் மேல், ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே உடன்பாடு ஏற்படாததால் இரண்டு முறை பிரெக்ஸிட் ஒப்பந்தம் தோல்வியடைந்தது. இந்நிலையில், ஒரு சில திருத்தங்களுடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் மூன்றாவது முறையாக இன்று தாக்கல் செய்யபடுகிறது.

இதுகுறித்து பேசிய சபாநாயகர் ஜான் பெஸ்கோ, அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக புதிய வடிவில் பல திருத்தங்களுடன் பிரெக்ஸிட் ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தெரசா மே-வின் அரசியல் ஆளுமை இந்த ஒப்பந்தத்தில் அடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், இம்முறை அவர் ஒப்பந்தத்தை வெற்றி பெறச் செய்வாரா அல்லது மீண்டும் தோல்வியைத் தழுவுவாரா என்கிற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



ABOUT THE AUTHOR

...view details