தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

3 வாரங்கள் முடங்கும் இங்கிலாந்து - போரிஸ் ஜான்சன் அறிவிப்பு - Coronavirus

லண்டன்: கரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக அடுத்த மூன்று வாரங்கள் இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

UK
UK

By

Published : Mar 24, 2020, 9:48 AM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக இத்தாலி, டென்மார்க் போன்ற நாடுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அடுத்துவரும் மூன்று வாரங்களுக்கு அந்நாடு முடக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "இன்று மாலை (இந்திய நேரப்படி) முதல் குடிமக்கள் அனைவரும் (இங்கிலாந்து நாட்டினர்) பின்பற்ற வேண்டிய மிக எளிய அறிவுறுத்தலைக் கூறுகிறேன்.

  • முடிந்தவரை வீட்டில் இருங்கள்.
  • அத்தியாவசிய பொருள்களை வாங்குவது, குடும்பத்தினருடன் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் வாக்கிங், ஜாங்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சி செய்வது போன்ற செயல்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும்.
  • மிகவும் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள மட்டும் மக்கள் வெளியே செல்ல அனுமதியளிக்கப்படும்.

இதை மீறுபவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடுத்த மூன்று வாரங்களுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும். அதன்பின் இருக்கும் நிலையைப் பொறுத்து தடை உத்தரவை நீட்டிப்பது குறித்து முடிவுசெய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க: உங்களுக்கு கரோனவா?- கண்டறிய உதவும் ஆப்பிள்!

ABOUT THE AUTHOR

...view details