ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை மேலும் சிறிது காலம் நீட்டிக்க கோரிக்கை வைக்கப்போவதாக, பிரிட்டன் பிரதமர் தெரெசா மே தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிட் விவகாரம் தொடர்பாக தெரெசாவுடன் பேச தயார்: பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் - UK opposition leader agrees to meet PM Theresa May
லண்டன்: பிரெக்ஸிட் விவகாரத்தில், பிரதமர் தெரெசா மே-வுடன் பேசத் தயார் என பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் தெரிவித்துள்ளார்.
theresa may
பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவரும் நிலையில், இது பற்றி ஆலோசிக்க எதிர்க்கட்சிகளுக்கு தெரெசா மே அழைப்பு விடுத்திருந்திதார்.
இந்நிலையில் தற்போது, பிரெக்ஸிட் விவகாரம் குறித்து பிரதமர் தெரசா மே-வுடன் கலந்து ஆலோசித்து ஒரு சுமுக முடிவை எடுப்பதற்கு இணைந்து பணியாற்ற தயார் என பிரிட்டன் எதிர்க்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பைன் தெரிவித்துள்ளார்.