தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

பிரிட்டனில் ஃபைசர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ஒவ்வாமை - Vaccine

பிரிட்டனில் ஃபசைர் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் ஜூன் ரெயின் தெரிவித்துள்ளர்

ஃபைசர் கரோனா தடுப்பூசி
ஃபைசர் கரோனா தடுப்பூசி

By

Published : Dec 9, 2020, 10:26 PM IST

லண்டன் :ஃபைசர்-பையோ என்டெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் வெற்றிப்பெற்றதாக கூறி, அதனை கரோனாவுக்கான மருந்தாக பிரிட்டன் அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இதனையடுத்து, அவசர கால பயன்பாட்டிற்காக இந்த மருந்தினை பயன்படுத்த அனுமதி வழங்கியது.

இந்த தடுப்பு மருந்து நேற்று (டிசம்பர் 8) பிரிட்டன் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. முதற்கட்டமாக, முதியவர்கள், முன் களப் பணியாளர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்ட இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே ஒவ்வாமையால் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஃபைசர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பேசிய அந்நாட்டின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பின் தலைவர் ஜூன் ரெயின் கூறுகையில்," ஃபைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒவ்வாமை ஏற்படக்கூடிய நபர்கள் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட இருவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க:பாரத் பயோடெக்கின் அடுத்த தடுப்பூசி தயார்... பரிசோதனை தொடங்க திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details