தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

சமூக பரவலான ஒமைக்ரான்... மக்கள் அதிர்ச்சி...

இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாகத் தொடங்கிவிட்டதாக என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Omicron Variant
Omicron Variant

By

Published : Dec 7, 2021, 7:38 PM IST

Updated : Dec 7, 2021, 9:40 PM IST

லண்டன்:தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த ஒமைக்ரான் தொற்று 38 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு, உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் மற்ற கரோனா வேரியண்ட்டுகளைவிட, மிக வேகமாக பரவக் கூடியது என்றும் ஆபத்தானது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக உலக நாடுகள், பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் எடுத்துவருகின்றன. இதனிடையே இங்கிலாந்து நாட்டில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை கடந்த ஒரு வாரமாக அதிகரித்துவருகிறது. அப்படி ஒரே வாரத்தில் 336 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் தெரிவித்தாவது, "வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமின்றி வெளிநாடு செல்லாத இங்கிலாந்து மக்களுக்கும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக தீவிர கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒமைக்ரான் பரவி வருவதால், சமூக பரவல் என்பதை சுட்டிக்காட்டும் நிலை ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறை

Last Updated : Dec 7, 2021, 9:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details