தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

தங்கள் நாட்டில் பத்தாயிரம் பேருக்கு கொரோனா...! - இங்கிலாந்து அரசு - uk corona afffected cases

லண்டன்: தங்கள் நாட்டில் சுமார் ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருக்கக்கூடும் என்று இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

uk-govt-annouces-that-5-10thousand-could-have-affected-in-covid-19
பிரிட்டனில் பத்தாயிரம் பேருக்கு கொரோனா இருக்கலாம் - பிரிட்டன் அரசு

By

Published : Mar 13, 2020, 8:08 AM IST

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,700-ஐ கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இங்கிலாந்து அரசு தங்கள் நாட்டில் ஐந்தாயிரத்திலிருந்து பத்தாயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்க புதிய வழிமுறைகளைக் கையாண்டுவருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை 590 நபர்களுக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டதாக அந்நாட்டு அரசின் மூத்த அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:அதிர்ச்சி: கொரோனா வைரஸால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details