ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
தொடர்ந்து, ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், உயர் சிகிச்சைக்காக அவர் ஜெர்மனி கொண்டுசெல்லப்பட்டார். அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாள்களுக்கு முன் ஜெர்மனி தெரிவித்திருந்தது சர்வதேச நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ரஷ்ய அதிபருக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துவந்ததாலேயே அலெக்ஸி நவல்னிக்கிற்கு புதினின் உத்தரவின்படி விஷம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக பிரிட்டன் வெளியுறவுத் துறை செயலர் டொமினிக் ராப் தனது ட்விட்டர் பக்கத்தில், "அலெக்ஸி நவல்னிக்கிற்கு விஷம் கொடுக்கப்பட்டது குறித்து பிரிட்டன் தனது கவலையை தெரிவிக்க இன்று ரஷ்யாவின் தூதருக்கு அழைப்பு விடுத்துள்ளது.