இங்கிலாந்து நாட்டில் கரோனாவுக்கு எதிராகத் தங்கள் இன்னுயிரையும் துச்சமென மதித்துப் போராடிவரும் மருத்துவத் துறையினரை கௌரவிக்கும் வகையில் அந்நாடு ஒரு விஷயத்தை மேற்கொண்டது.
அது, 'அக்கறையாளர்களுக்கு கைதட்டல்'. அதன்படி நேற்று மாலை, அந்த மருத்துவ நாயகர்களுக்கு அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் 11 டவுனிங் தெருவில் நின்று கைத்தட்டி தனது பாராட்டை வெளிப்படுத்தினார்.
இதேபோல், அந்நாட்டிலுள்ள மக்களும் கைதட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். மேலும் லண்டன்வாசிகள் கைதட்டி குரல் எழுப்பியதோடு, பானைகளில் ஒளி எழுப்பி கரோனாவுக்கு எதிராக மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருபவர்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனர்.
இங்கிலாந்தில் தற்போது ஊடங்கு அமலில் உள்ளது. இச்சூழலில் அங்கு கோவிட்-19 பரவுதல் குறைந்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 33 ஆயிரத்து 718 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டும், இரண்டாயிரத்து 921 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.