தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அரசு தகவல்களை கசிய விட்டதால் பாதுகாப்புத்துறை செயலர் பதவி நீக்கம்! - Defense Secretary

லண்டன்: அரசு தகவல்களை கசியவிட்டது தொடர்பாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை செயலர் கேவின் வில்லியம்சனை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு பிரதமர் தெரசா மே உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை செயலர் கேவின் வில்லியம்சன்

By

Published : May 2, 2019, 10:24 AM IST

தொலைத்தெடர்பு நிறுவனமான ஹவேயிடம் "5ஜி" இணைய சேவையை பிரிட்டன் முழுவதும் மேற்கொள்ள அந்நாட்டு அரசு ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பான தகவல்களை பாதுகாப்புத்துறை செயலர் கேவின் வில்லியம்சன் கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பிரதமர் தெரசா மே கவனத்துக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, கேவின் வில்லியம்சன்னை பதவி நீக்கம் செய்வதாக அவர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக வில்லியம்சனுக்கு, தெரசா எழுதிய கடித்தில், " இந்த விவகாரம் மிகவும் வருத்தமளிக்கிறது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் புலனாய்வின் அடிப்படையில் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் " என கூறியிருக்கிறார்.

இதற்கு பதிலளித்து பிரதமருக்கு, வில்லியம்சன் எழுதிய கடிதத்தில், " எனது துறையிலிருந்து கைப்பற்ரப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவிக்கிறேன். இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரிக்கிறேன். என்னை பதவி விலக நிங்கள் வலியுறுத்தியுள்ளதை நான் ஏற்கிறேன். அதே சமயம், இந்த தகவல்கள் கசிய எனது ஊழியர்கள், ஆலோசர்கள்தான் பொறுப்பு " என கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details