லண்டன்:துபாய் அரசர் ஷேக் முகம்மது பின் ரஷித் அல் மக்தூம், ஜோர்டன் மன்னர் அப்துல்லாவின் உறவினரான ஹயா பின்ட் அல் ஹூசைனை ஆறாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 13 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர்.
இந்த நிலையில், ஹயா பின்ட் அல் கருத்து வேறுபாடு காரணமாக துபாயில் இருந்து வெளியேறி, லண்டனில் தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இதனிடையே, ஹயா பின்ட், லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தாக்.
அதில், துபாய் அரசர் ஷேக் முகம்மது உடன் எனக்கு கட்டாய திருமணம் செய்யப்பட்டது. சுதந்திரம் வழங்கப்படவில்லை. இப்போது பிரிந்து வாழ்கிறோம். அவரால் எனது குழந்தைகள் கடத்தப்பட வாய்ப்புள்ளது. எனக்கு விவாகரத்தும், குழந்தைகளுக்கு பாதுகாப்பும் வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.