வைர வியாபாரியான நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணம் கொடுத்து ரூ.13,000 கோடி மோசடி செய்துவிட்டு பிரிட்டனில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவரின் இருப்பிடத்தைக் கண்டறிந்த அந்நாட்டு காவல் துறையினர், கடந்தாண்டு கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
7ஆவது முறையாக நிரவ் மோடியின் பிணை மனு தள்ளுபடி! - ஏழாவது முறையாக நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி
லண்டன்: வங்கி மோசடி வழக்கில் சிறையில் உள்ள நிரவ் மோடியின் பிணை மனுவை ஏழாவது முறையாக லண்டன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
nirav
இது குறித்து வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. மேலும், அவரை இந்தியா அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ, அமலாக்கத் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், சிறையிலிருக்கும் நிரவ் மோடி பிணை கோரி மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார். ஆனால், அவரின் பிணை மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஏழாவது முறையாக நிரவ் மோடியின் பிணை மனு தள்ளுபடியாவது குறிப்பிடத்தக்கது.