கரோனா வைரஸ் பாதிப்பால் திண்டாடிவரும் உலக நாடுகளுக்கு சுகென்டெக் என்ற தென் கொரிய மருந்து நிறுவனம், மலிவு விலையில் துரித பரிசோதனை கருவிகளை தயாரித்து விநியோகித்து வருகிறது. 12.50 டாலருக்கு கிடைக்கும் இந்த துரித பரிசோதனை கருவிகளை பிரிட்டனின் ருதென்ஃபோர்டு ஹர்த் என்ற தனியார் மருத்துவக் குழுமம் பரிசோதிக்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சோதனையை அந்நாட்டில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனை ஊழியர்கள் நடத்தியதாகவும், சோதனை மாதிரிகள் விலையுயர்ந்த பரிசோதனைக் கருவிகளில் மேற்கொள்ளப்படும் என அம்மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.