கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் உலகின் 213-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் மனிதர்களைப் போலவே பூனை, சிங்கம், நாய், புலி ஆகிய விலங்குகளுக்கு பரவி, அது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
டென்மார்க் நாட்டில் பண்ணைகள் மூலம் மிங்க் வகை கீரிகள் உணவுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணைகளில் வளர்க்கப்படும் கீரிகள் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இறைச்சி உணவிற்காக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், மிங்க் வகை கீரியிடம் கரோனா பரவி இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. டென்மார்க்கில் உள்ள கீரி வளர்ப்புப் பண்ணையில் வேலை செய்பவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 214 பேருக்கு சமீபத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.