தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / international

அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படும்  ஜூலியன் அசாஞ்சே! - assanges

லண்டன்:  பாலியல் தொடர்பான குற்றச்சாட்டில் பிணை நிபந்தனைகள் மீறிய  வழக்கில்  50 வாரம் சிறைவாசம் அனுபவித்துவரும்  விக்கிலீக்ஸ் அதிபர்  ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த  பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.

ஜூலியன் அசாஞ்சே

By

Published : Jun 13, 2019, 7:38 PM IST

சர்வதேச அளவிலான நிறுவனங்களின் அதிபர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல தரப்பட்டவர்களின் ரகசியங்களை, விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சே வெளியே விட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது தொடர்பாக வழக்கு அமெரிக்காவில் பதியப்பட்டது.

இதற்கிடையே, லண்டனில் உள்ள ஈக்குவேடார் நாட்டின் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக வசித்துவந்த ஜூலியன் அசாஞ்சேவுக்கு அந்நாட்டு அரசு அளித்து வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டதையடுத்து, அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, பிணை நிபந்தனைகள் மீறிய வழக்கில், 50 வாரச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இவர் மீதான வழக்கு அமெரிக்காவில் உள்ளதால் அவரை நாடு கடத்த வேண்டும் என்று பிரிட்டன் அரசிடம், அமெரிக்கா வலியுறுத்தியது.

இதில், தற்போது பிரிட்டன் உள் துறை செயலர் சாஜித் ஜாவித் கையெழுத்திட்டுள்ளதாகவும், நாளை இது நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details