சீனா அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், கரோனா, ஹாங்காங் போராட்டம் குறித்து தவறான தகவல்களைப் பரப்பியதாக ஒரு லட்சத்து 76 ஆயிரம் ட்விட்டர் கணக்குகள் நீக்கப்பட்டன.
அதேபோல் 23 ஆயிரத்து 750 பிராதான ட்விட்டர் கணக்குகளும், அந்த கணக்குகளில் பதிவிடப்படும் ட்வீட்டுகளை ரீ ட்வீட் செய்யும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
23 ஆயிரத்து 750 ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ட்வீட்களின் உள்ளடக்கம் குறித்து பகுப்பாய்வு செய்த ஆஸ்திரேலிய ஸ்ட்ராட்டஜி பாலிசி இன்ஸ்டிடியூட் (ASPI) மற்றும் அமெரிக்க ஸ்டான்போர்ட் இணைய ஆய்வகம் கூறுகையில், முடக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகளில் 78 விழுக்காடு கணக்குகளுக்கு பின்தொடர்பவர்களே இல்லை என்றும், பின் தொடர்பவர்கள் இருக்கும் ட்விட்டர் கணக்குகளில் 95 விழுக்காடு கணக்குகளுக்கு எட்டு பேருக்கு மேல் பின்தொடர்பவர்கள் இல்லை" எனக் கண்டறிந்துள்ளது.